





ஏழு தமிழர்களை தமிழ்நாடு அரசு விடுவித்த பின்பும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்பும், எழுவரை விடுதலையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் இந்திய ஒன்றிய பாஜக அரசையும், தமிழ்நாட்டு ஆளுநரையும் கண்டித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 03-12-2020 அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம், தபெதிக, திவிக, தமிழ்ப்புலிகள் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கலந்து கொண்டன.