



தமிழ்நாடு உருவான நாளை கொண்டாடியதற்காக தமிழக அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி மதுராந்தகம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் தமிழக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பொழிலன் அவர்களுக்கும், தமிழக மக்கள் குடியரசு கட்சியின் தலைவர் தம்பி மண்டேலாவுக்கும் பிணை கிடைத்ததை அடுத்து இன்று 10.11.20 செவ்வாய்கிழமை மாலை 5.30மணியளவில் விடுதலை ஆனார்கள்.
விடுதலையான தோழர்களுக்கு சிறை வாயில் முழக்கங்களோடு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தோழர்கள் அனைவரும் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிற சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மே-17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தியும் தோழர் பிரவீன்குமாரும் கலந்துகொண்டு அரசின் அடக்குமுறையை சந்தித்த தோழர்கள் பொழிலன் அவர்களுக்கும் தம்பி மண்டேலா அவர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து வரவேற்றார்கள்.