அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழக்கு: நீதிபதி கிருபாகரன் தீர்ப்பும், 7 தமிழர் விடுதலையும்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழக்கு: நீதிபதி கிருபாகரன் தீர்ப்பும், 7 தமிழர் விடுதலையும் – மே17 இயக்கம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தமிழக அரசு நிறைவேற்றி அதனை அன்றே தமிழக ஆளுநருக்கும் அனுப்பி விட்டது. ஆனால் ஆளுநர் கிட்டத்தட்ட இரண்டு மாதம் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்தார். எனவே ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை முன்வைத்திருக்கிறார்கள்.

அதாவது அரசியலமைப்பு சட்டம் 361 வது பிரிவின்படி ஆளுநர் கட்டாயமாக மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று இருப்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் தரப்பு வாதிட்டு வருகிறது. இந்த வாதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு.

ஆம். இந்திய அரசியலமைப்பு சட்டம் 361 வது பிரிவின்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்பது உண்மைதான்.ஆனால் இந்திய அரசியல் சட்டம் 200 ஆவது சட்டத்தின்படி ‘மசோதா மீதான ஒப்புதல்’ (Assent to bill) என்ற பிரிவின் கீழ் ஆளுநர் தனக்கு அனுப்பப்படும் மசோதாவின் மீது விரைவில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் அது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதோ என்பது ஆளுநரின் முடிவு. ஆனால் ஏதேனும் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதன் பிறகே நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவ இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவின் மீது கையெழுத்திட்டிருக்கிறார்.

இப்போது இதே 200வது சட்டப்பிரிவின் படி ஏற்கனவே தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியிருக்கிற 7 தமிழர் விடுதலைக்கான மசோதாவின் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு வலியுறுத்தலாம்.

7 தமிழர் விடுதலையில் உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழக அரசு இதனை உடனடியாக செய்ய வேண்டும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply