சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என்று தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தமிழ்த்தேசிய போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் பதூசியம்மாள் அவர்களின் மறைவிற்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், பொன்பரப்பி அருகிலுள்ள மதகளிர் மாணிக்கம் ஊரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு 01-11-2020 அன்று நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.





