மதுரையில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடிய தமிழுணர்வாளர்கள் மீது தாக்குதல் – மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் விழாவாக தமிழ் நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்களும் தமிழுணர்வாளர்களும் மதுரை தமுக்கம் திடலில் அமைந்துள்ள தமிழன்னைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முயற்சித்த போது, காவல்துறையினரால் தடுக்கப்பட்டு கைது செய்ய முயற்சித்தனர். அப்போது வந்திருந்த தோழர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். காவல்துறையினரின் இந்த அராஜக போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.








