தமிழக BC, MBC மாணவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய 50% இடஒதுக்கீட்டை மறுத்து, தமிழர்கள் மருத்துவம் படிப்பதை தடுக்கும் பாஜகவை கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று (31-10-2020) மாலை 5 மணிக்கு, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! கண்டன முழக்கங்களுடன் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் உமாபதி அவர்களும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் குமரன் அவர்களும் உரையாற்றினர். இறுதியாக, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ, தமிழர் விடியல் கட்சி மற்றும் தமிழின உணர்வாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.














