பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய்யக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (24-10-20) மாலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.



