தமிழ்நாட்டுக் கொடி அறிமுகம்!
நவம்பர் 1 “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்படுவதை ஒட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டிக் கொடி அறிமுகம், இன்று (20-10-2020) காலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. வெள்ளை நிற பின்புலத்தில் சிவப்பு நிற தமிழ்நாடு வரைபடம் கொண்ட கொடியினை தமிழ்நாடுக் கொடியாக, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இணைந்து அறிமுகப்படுத்தினர்.
கொடி அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்…
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,
தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன்,
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன்,
தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன்,
திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி,
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சேக் முகமது அலி,
திராவிடர் விடுதலைக் கழகம் தபசி குமரன்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்டத் தலைவர் குமரன்,
மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தோழர் முத்தமிழ் ,
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் செல்வமணி,
மக்கள் குடியரசுக் கழக தோழர் மண்டேலா,
தமிழ்நாடு திராவிடர் கழகம் காசு நாகராசன்
மற்றும் எண்ணற்ற தோழர்கள் கலந்துகொண்டனர்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு