பெரியார் தொண்டரும் விடுதலைபுலிகளுக்கு உற்ற தோழருமான ஐயா ராசாசி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, மே பதினேழு இயக்கம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், ஞாயிறு (27-09-2020) மாலை 5 மணியளவில், மதுரை யானைக்கல் பிரசிடெண்ட் விடுதியில் நடைபெற்றது.
தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன் அவர்கள், ஐயா ராசாசி அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்த இந்த நிகழ்விற்கு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் தலைமை வகிக்க, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் தோழர் கிட்டுராசா முன்னிலை வகித்தார். மேலும் விசிக துணை பொதுச்செயலாளர் கணியமுதன், மணியம்மை மழலையர் பள்ளியின் வரதராசன், திராவிடர் விடுதலை கழகத்தின் திலீபன் செந்தில் உள்ளிட்ட பெரியாரிய உணர்வார்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.