சென்னை மாநகராட்சி பணிகளை திடுதிப்பென தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சியே உடனடியாக கைவிடுக! மே17 இயக்கம்
சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் அவர்களுக்கு முறையான ஊதியம் எதுவும் கொடுக்காமல், பணிநிரந்தரம் செய்யாமல், ஊதிய உயர்வும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில் இதை எதிர்த்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிற வேளையில் திடுதிப்பென சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் பணியை வெளிநாட்டு நிறுவனத்திடம் தாரை வார்த்து இருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் இந்த செயல் மாநகராட்சி வேலைகளை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பதற்கு சமம். ஆகவே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு இதுபோன்ற தனியார் நிறுவனங்களை உள்ளே விட்டு அரசு தனது பொறுப்பில் இருந்து விலகுவதை கைவிட வேண்டும்.
குப்பை அள்ளுவதற்கு இயந்திரம் கண்டுபிடித்து அதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மாற்று வழியை ஏற்பாடு செய்வது தான் சரியாக இருக்குமே ஒழிய, அதை விடுத்து அரசு பொறுப்பை தனியாரிடம் கொடுத்து தனியார் மூலம் மீண்டும் குப்பை அள்ளுவதற்கு அதே தொழிலாளிகளை எந்தவித நன்மைகளும் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி சரியாகும். சென்னை மாநகராட்சியின் இந்த தனியார்மயக் கொள்கையை கைவிட்டு விட்டு நகராட்சி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது
மே 17 இயக்கம்
9884072010