மக்கள் விரோத பாஜக அரசு, விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் வகையில் மூன்று விவசாய விரோத மசோதாக்களை ஜனநாயகமற்ற முறையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்களை திரும்ப பெறக் கோரி, 21-09-2020 திங்கள்கிழமை மாலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது. இச்சந்திப்பின் போது தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது இந்திய அரசுக்கு எதிராக இந்திய அரசு நிறுவன முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை (23-09-20) புதன்கிழமை காலை 10:30 மணியளவில், இந்திய அரசு நிறுவனமான சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.
அனைவரையும் பங்கேற்க அழைக்கின்றோம்.
மே பதினேழு இயக்கம்
9884072010




