1891ல் திராவிட மகாசனசபையை பண்டிதர் அயோத்திதாசரோடு இணைந்து உருவாக்கி தமிழகத்தில் அரசியல்-சமூக அமைப்பு உருவாக்கம் எனும் வரலாற்றை துவக்கிய தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள் இன்று.
இந்த அரசியல் சமூக இயக்கமே தமிழகத்தின் வரலாற்றில் ஆங்கில ஆட்சியில் மக்கள் திரள் அமைப்புகள் எனும் வரலாற்றை துவக்கியது எனலாம். அதுவரை மதமாக, சாதியாக இருந்த மக்கள் திரளை அரசியல் முழக்கத்துடன் கூடிய அமைப்பாக திரட்டிய முயற்சியும் இதுவே எனலாம். தமிழ்நாட்டில் சமூக நீதி போராட்டம் துவக்கப்படுவதற்கும், வலுப்பெறுவதற்கும் இந்த அரசியல் முயற்சிகளே பெரும் அடித்தளமாக விளங்கின.
மேலும் அடித்தட்டு மக்களின் அரசியல் உரிமை எது என்பதை தெளிவாக வரையறுத்ததும், அவர்களை அரசியல் ஆற்றலாக மாற்றியதும், ஆங்கில ஆட்சியிலேயே மாற்றத்திற்கான முயற்சியை ஆங்கில அரசரை சந்தித்து உணர்த்தியதுமான நீண்ட போராட்ட வரலாறு ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களையே உரித்தாகும்.
1893ல் ‘பறையன்’ இதழை துவக்கி தமிழரின் அரசியல் எழுச்சிக்கு வித்திட்டவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம். இதழியல், அரசியல் சமூக இயக்க மக்கள் திரள் அமைப்புகள் என பலவற்றிற்கு முன்னோடியாக அமைந்த நம் வழிகாட்டிக்கான மரியாதையை செலுத்துவோம்.