
புதிய கல்வி கொள்கை, நீட், இந்தி மொழி உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாட்டின் மீது திணிக்க முயலும் தமிழக, தமிழர் விரோத பாஜகவை கண்டித்து, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் தமிழ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (12-09-2020) காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், SDPI கட்சின் தேசிய துணைப் பொதுச்செயலாளர் தெஹ்லான் பாகவி மற்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் முகமது ஷேக் அன்சாரி , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலளார் தபசிக் குமரன் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் சின்னப்பத் தமிழர், தமிழக மக்கள் முன்னணியின் வழக்கறிஞர் பார்வேந்தன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலைக் கட்சியின் தோழர்கள், மற்றும் மே பதினேழு இயக்கத்தின் தோழர்களும், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்களும் பங்கேற்றனர்.











