சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23 அன்று கடலுக்குப் போன 10 மீனவர்கள் இன்றுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கத்தின் சார்பாக நேற்று 08/9/2020 பிற்பகல் 3.30மணிக்குகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தெய்வமணி தலைமை ஏற்றார்.நாகூரான் தோட்டம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு பொதுவுடைமை தலைவர் தோழர் ஜீவா நினைவிடம் வழியாக சென்று உதவி இயக்குநர் அலுவலகத்தின் எதிரேயுள்ள கம்யூனிஸ்ட் தலைவர் சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் இடப்பட்டன. மேலும், தமிழ் மக்கள் உரிமைக் கூட்டியக்கத்தின் சார்பாக உதவி இயக்குநரிடம் கோரிக்கை மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டார்கள். மே 17 இயக்கமும் கலந்து கொண்டது.