இந்திய இராணுவத்தளத்தை காட்டிக்கொடுக்கும் மோடியின் ’ஆரோக்கிய சேது’ செயலி
மக்கள் கொரோனாவிலிருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள மத்திய மோடி அரசு ‘அரோக்கிய சேது’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதனை இந்திய ஒன்றியத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தியே ஆகவேண்டுமென்று மோடி அரசு உத்தரவிட்டது. இதன் பாதுகாப்பு குறித்து கேள்வி வந்தபோது இது சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் யாரேனும் குறை சொன்னால் அவர்களுக்கு சன்மானம் தருகிறோம் என்றெல்லாம் பேசியது.
மோடி அரசின் இந்த அதீத அழுத்தத்தின் காரணமாக சுமார் 10மில்லியன் இந்திய ஒன்றிய மக்கள் இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தாங்கள் சொல்வதை கேட்பதை தெரிந்துகொண்ட மோடி அரசு உச்சபட்சமாக இராணுவ வீரர்களும் கட்டாயம் இந்த செயலியை தங்களது கைப்பேசியில் தரவிறக்கம் செய்யவேண்டுமென்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதனை அப்போதே மிகக் கடுமையாக பலர் எதிர்த்தார்கள். நாமே நம் இராணுவ வீரர்களின் நடமாட்டத்தை இராணுவ தளங்களை காட்டிக்கொடுப்பதற்கு சமம் என்றெல்லாம் சொல்லி பார்த்தார்கள். ஆனால் இந்த செயலியை யாராலும் ஹேக் செய்யமுடியாது என்ற தனது டிவிட்டர் பக்கத்தை ஹேக்கர்களிடம் பறிக்கொடுத்த மோடி அரசு சொன்னது.
இப்போது இந்திய இராணுவ வீரர்களின் நடவடிக்கையை இந்த செயலி மூலம் கண்காணிக்க முடியுமென்று தமிழகத்தை சேர்ந்த ராஜ் பகத் பழனிச்சாமி என்பவர் நிரூபித்திருக்கிறார். அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். பார்க்க இணைப்பு 01.மேலும் இந்த செயலியை பயன்படுத்தி கொரோனா தவிர வேறு எந்த தகவலும் எடுக்க முடியாது என்று சொன்ன அரசுக்கு இல்லையில்லை நிறைய தகவல்கள் எடுக்க முடியுமென்பதையும் நிருபித்திருக்கிறார். பார்க்க இணைப்பு 02.
மோடி அரசின் ஒவ்வொரு திட்டமும் இப்படித்தான் மக்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாதது உதாரணமாக ஆதார் அட்டை இன்று இந்திய ஒன்றியத்திலிருக்கும் ஒவ்வொரின் தனிப்பட்ட தகவல்களை திருடவேண்டுமென்றால் ஆதார் அட்டையை தகவலை ஹேக் செய்தாலே போதுமானது. இந்த லட்சணத்தில் ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை என்ற அடுத்த ஆபத்தையும் திணிக்கிறது.
இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்பு, பாதுகாப்பு வீரர்கள், பொதுமக்கள் என்று யாருக்கும் பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலையை திட்டமிட்டு இந்த மோடி அரசு உருவாக்கி வருகிறது.
மே17 இயக்கம்
9884072010