![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/08/117444861_3787246781292753_6255823117791331867_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/08/117644876_3787248017959296_591185456686769372_o.jpg)
RBIஇன் முக்கிய பதவிக்கு ஊழல் குற்றச்சாட்டில் இருப்பவரை நியமிப்பதா?
பிஜேபி அரசு ஊழலுக்கெதிரான ஒரு கட்சியாக 2014இல் போலியாக சித்தரிக்கப்பட்டுதான் இந்திய ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வங்கியில் கடனை வாங்கிவிட்டு திருப்பி கட்டாமல் பெரும்பணக்காரர்களை பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தது, பணமதிப்பிழப்பின் போது குஜராத கூட்டுறவு வங்கியில் அமித்ஷா பணத்தை மாற்றியது. ரபேல் ஊழல் என ஊழலின் ஊற்றுக்கண்ணே அந்த கட்சி தான் என்பது வெட்டவெளிச்சமானது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரிசர்வ் வங்கியின் கடன் சீரமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் தலைவராக கே.வி.காமத் என்பவரை நியமித்திருக்கிறார்கள். (படம் 01இல் இருப்பவர்)
இந்த கே.வி.காமத் என்பவர் 23வருடங்களாக தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், கடன் ஒப்புதல் அளிக்கும் குழுவிலும் இருந்தவர். இவர் இந்த பதவியில் இருந்த சமயத்தில் தான் விடியோகான் நிறுவனத்திற்கு 3000கோடி ரூபாய் முறையான ஆவணங்கள் இல்லாமல் கடன் அளித்ததாக சிபிஐயால் வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது.. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக செல்வி சாந்தா கோச்சரின் (படம் 2இல் இருப்பவர்) பெயரோடு இந்த கே.வி.காமத்தின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
இப்படி ஏற்கனவே கடன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஜயால் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை கொரோனா காலத்தில் யாருக்கு கடன் வழங்கவேண்டுமென்று முடிவு எடுக்கும் ரிசர்வ் வங்கியின் முக்கிய குழுவின் தலைவராக நியமித்திருப்பது மீண்டும் ஊழலுக்கு வழி வகுக்காதா? இது தான் பிஜேபியின் ஊழல் ஒழிப்பின் லட்சணமா என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி கேட்டுள்ளது. https://www.moneycontrol.com/news/business/bank-union-approaches-rbi-seeking-review-of-kv-kamaths-appointment-as-loan-restructuring-committee-head-5677211.html
மே17 இயக்கம்
9884072010