








புதிய கல்விகொள்கை என்ற பெயரில் கல்வியை தனியார் மயமாக்கவும், கல்வி உரிமையை மாநில அரசிடமிருந்து பிடுங்கி மத்திய அரசின் கீழ் கொண்டு போகவும், மாணவர்களை பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டவும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் வழி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி நேற்று 11.08.2020 செவ்வாய்கிழமை தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பெரியார் உணவர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் கலந்துகொண்டன். மே 17 இயக்கமும் தோழர்களோடு கலந்து கொண்டனர்.
பல்வேறு ஊர்களில் நடந்த போராட்டத்தின் புகைப்பட தொகுப்பு.
மே 17 இயக்கம்
9884072010