


மதுரை மே 17 இயக்க தோழர் நாகராஜ் பாபு அவர்களின் தந்தையும் பெரியாரியவாதியுமான அய்யா இராசாசி மறைந்தார்.
மதுரையில் மே 17 இயக்கத்தின் களப்பணியில் முன்னணியில் இருக்கும் தோழர் நாகராஜ் பாபு அவர்களின் தந்தை அய்யா இராசாசி அவர்கள் இன்று காலையில் உடல்நலக்குறைவால் நம்மைவிட்டு பிரித்துவிட்டார்.
அய்யா இராசாசி அவர்கள் தமிழீழ விடுதலை மீதும் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராட்டக் களத்தில் நின்றவர். இன்னும் சொல்லப் போனால் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுடன் மிகுந்த நெருக்கம் உடையவர். ஈரோடு பாசறையாம் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டவர்.
அப்படிப்பட்ட சுயமரியாதை வீரர் அய்யா இராசாசி அவர்கள் இன்று காலையில் நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மே17 இயக்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
மே17 இயக்கம்
9884072010