






புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து 04-08-2020 செவ்வாய் அன்று, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒரே நாளில் மதுரையில் நடைபெற்ற இரண்டு போராட்டங்களிலும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.