தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதா, 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும், 1994 உச்சநீதிமன்ற குறிப்பாணைக்கு எதிராகவும் உள்ளது. பாதிப்பிற்குள்ளாகும் மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற அறம் சார்ந்த செயலை இந்த மசோதா மறுக்கிறது.
இம்மசோதா நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதால் 10 நாட்களுக்குள் 22 அலுவலக மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், 25 நாட்களை கடந்தும் இன்றளவிலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இந்த மசோதாவினை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பாக முன்னெடுக்கும் சமூகவலைத்தள பரப்புரைக்கு மே 17 ஆதரவளிக்கிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் நடைபெறும் #ScrapEIA2020 என்னும் சமூகவலைத்தள பரப்புரையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.