2019 ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பட்னாவிஸ் தலைமையிலான பிஜேபி அரசும், தேர்தல் ஆணையமும் எப்படி கூட்டாக வேலை செய்தார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலம்.
மனித உரிமை செயற்பாட்டாளர் சாகேத் கோகலே நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதாவது மாகராஷ்டிரா தேர்தல் ஆணையத்தின் சமுகவலைதள பக்கத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் முகவரியை சாகேத் பார்த்திருக்கிறார். அதில் “202 பிரஸ்மேன் ஹவுஸ், வைல் பார்லே, மும்பை.” (பார்க்க படம் 01) என்று இருந்திருக்கிறது. அது குறித்து சாகேத் மேலும் தேடியிருக்கிறார்.
அப்படி தேடிய போதுதான் அந்த நிறுவனம் ’சோசியல் செண்ட்ரல்’ என்ற அரசுகளுக்கு தேர்தல் வேலையை செய்யும் டிஜிட்டல் நிறுவனமென்றும் அதன் உரிமையாளார் தேவாங் டேவ் என்றும் கண்டுபிடித்திருக்கிறார் (பார்க்க படம் 02). இந்த தேவாங் டேவ் யாரென்றால் பிஜேபி அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமுகவலைதளத்தை நிர்வாகிக்கும் தேசிய நிர்வாகி. அதோடு பிஜேபியின் சார்பாக “அச்சமற்ற இந்தியன் Fearless Indian”, “நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் I Support Narendra Modi எனும் இரண்டு இணையதளத்தையும் நிர்வாகிக்கும் நிர்வாகியும் ஆவர். இந்த இரண்டு இணையதளத்திலும் மதத்துவேசத்தை தூண்டும் வகையிலும் ஏராளமான பொய் செய்திகளையும் பதிவேற்றுவதையே வேலையாக செய்திருக்கிறார். மேலும் இவரைதான் மகாராஷ்டிரா அரசின் செய்திகளை சமுகவலைதளங்களில் பரப்பும் வேலையை செய்யவும் முந்தைய பட்னாவிஸ் அரசு நியமித்திருக்கிறது.
இப்படி பிஜேபியின் ஐடி விங்கில் இருக்கும் ஒருவரை ஏன் மகாராஷ்டிரா தேர்தல் ஆணையர் பல்தேவ் சிங் தேர்தல் ஆணையத்தின் வேலைக்கு நியமித்தாரென்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏனென்றால் தேர்தலின் போது சமுக வலைதளங்களில் எவ்வாறு கட்சிகள் வேலை செய்கிறது என்பதை கண்காணிக்கும் மிகமுக்கிய பொறுப்பை எப்படி பிஜேபியின் ஐடிவிங்கின் நிர்வாகிக்கு கொடுக்கமுடியும் இதன்மூலம் அவர் ஒருதலைபட்சமாக செயல்பட்டிருக்கிற அனைத்து முகாந்திரமும் இருக்கிறதே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இன்று சாகேத் மற்றொருமுக்கிய கேள்வியையும் எழுப்பியுள்ளார். அதாவது மகாராஷ்டிரா மாநில தேர்தல் நடைபெறவிருந்த மூன்று மாதத்திற்கு முன்னால் தான் மாநில தேர்தல் ஆணையர் அஸ்வினி குமாரை நீக்கிவிட்டு பல்தேவ் சிங்கைபட்னாவிஸ் அரசு நியமித்திருகிறது.
ஆக திட்டமிட்டு பட்னாவிஸ் தலைமையிலான பிஜேபி அரசு தேர்தல் ஆணையத்தோடு சேர்ந்து மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஈடுபட்டிருக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியில் வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக வரவேண்டிய அசோக் லாவாசாவை சம்பந்தேமேயில்லாமல் ஆசிய தேசியவங்கியின் உதவி மேலாளாராக மோடி அரசு மாற்றியிருக்கிறது என்பதையும் பொறுத்தி பார்த்தால் பிஜேபியின் தேர்தல் வெற்றிக்கு பின்னாலுள்ள பல உண்மைகள் அம்பலமாகும்.
மே17 இயக்கம்
9884072010
குறிப்பு