தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்

தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம் – மே 17 இயக்கம்

பார்ப்பனர்களின் கையில் இருந்த அச்சு ஊடகத்தை எளிய மக்களின் குரலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அச்சில் ஏற்றி ஒரு மாபெரும் போரை இந்திய துனைக்கண்டத்தில் நிகழ்த்தியது தமிழகம் தான்.

1869ல் துவங்கிய ’சூரியோதயம்’ என்கிற முதல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பத்திரிக்கை தொடங்கி , இருபது வருடங்களில் ’பஞ்சமன்’, ’திராவிட பாண்டியன்’, ’மகாவிகட தூதன்’, ’பூலோக வியாசன்’ ’பறையன்’ உள்ளிட்ட என்னெற்ற பத்திரிக்கைகள் வெளி வந்தன இவை அனைத்தும் பார்ப்பனியத்திற்கு எதிராக போர் புரிந்தவை.

இதில் குறிப்பாக தாத்தா இரட்டமலை சீனிவாசன் துவங்கிய ’பறையன்’ நாளிதழ் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குரலாக ஓங்கி ஒலித்தது. பார்ப்னியத்திற்கு எதிரான அறச்சிற்றத்தோடு அந்த குரல் இருந்தது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்
ஜேம்ஸ் ட்ரெமன்ஹர் அவர்கள் பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கிய 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் குறித்து தமிழ்நாட்டின் முதல் பத்திரிக்கை என பெருமை பொங்க மார்தட்டிக் கொண்ட பார்ப்பனிய பத்திரிகையான சுதேசிமித்திரன் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததோடு ஆங்கிலேய கலெக்ட்ரின் தலித்களுக்கு சார்பான போக்கை விமர்சித்தும் எழுதியது.

சுதேசிமித்திரனின் இத்தகைய சாதிய வன்மம் நிறைந்த கட்டுரையை கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், நிலமற்ற பட்டியல் சாதி மக்களுக்கான நிலம் பெறும் உரிமையை ’பறையன்’ பத்திரிகையின் வாயிலாக அரசியல் தர்க்கங்களோடு பதிவு செய்து பார்ப்பனியத்தின் முகத்திரையை கிழித்தெரிந்தார் தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.

இன்று பார்ப்பனிய RSSன் செல்ல பிள்ளையான பாஜகவினுடைய தமிழக தலைவர் ஒரு தலித் என பெருமையாக, அவரை இந்துமக்களின் பிரதிநிதியாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் தலித்துகள் இந்துகள் அல்ல என்கின்ற உண்மையை உரக்க பேசியும்/எழுதியும் வந்தார் தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.

தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உழைத்த திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply