கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03
வாடகை கார் மற்றும் ஆட்டோ ஒட்டுநனர்கள்:
இந்தியாவில் மோட்டார் வாகனத்துறையில் 750000 த்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர். அரசும் இவர்களுக்கான எந்தவித உதவியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஊரங்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். இதனால் இவர்களின் வாழ்வே கேள்விக்குறியாக நிற்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இப்போதாவது அரசு கீழ்க்காணும் அவர்களது சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவர்கள் ஓரளவுக்கு இந்த பிரச்சனையிலிருந்து மீள்வார்கள். அவை
1.ஆட்டோ வாடகை கார் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கியிருக்கும் கடன் தொகையை மூன்று மாதத்திற்கான EMI யை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும்.
2. அடுத்த மூன்று மாதத்திற்கான EMI கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும்
3.அனைத்து வாகனங்களுக்கும் ஆண்டு வரியை உடனே ரத்து செய்ய வேண்டும்.
4. அனைத்து வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையை 50 விழுக்காடு வரை குறைத்து அறிவித்திட வேண்டும்.
5. அமைப்பு சாரா தொழிலாளர்களாக இயங்கும் பல லட்சம் ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு குறைந்தது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்கிட வேண்டும்.
6. அடுத்த நான்கு மாதங்களுக்கு சுங்கச்சாவடி வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும்.
7. பெட்ரோல் டீசல் விலையை 40 விழுக்காடு வரை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும
8.ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு கடந்த 3 மாதங்களாக எவ்வித வருமானமும் இல்லாமல், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத நிலைமையில் உள்ளனர்.இந்த நிலையில் அவர்கள் வங்கிகளில் வாங்கிய மாதத் தவணையை வட்டியுடன் சேர்த்து செலுத்துமாறு இப்பொழுதே போன் செய்து மிரட்டிக் கொண்டிருக்கும் வங்கிகளை கண்டிக்க வேண்டும்.
ஒவ்வொரு வாகனத்தின் மீதும் ஜிஎஸ்டி என்ற வரி மூலம் 3 லட்சம் முதல் 10 லட்சத்திற்கும் மேல் வரியாக வசூலிக்கும் இந்த அரசு அதன் பிறகு ஆண்டு வரி சுங்கச்சாவடி வரி என ஓட்டுனர்கள் ஓட்டுனர் உரிமையாளர்களிடம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது
அதுபோக ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆண்டிற்கு FC . PERMIT இன்சூரன்ஸ் ஆண்டு வரி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி என ஒரு லட்சத்திற்கும் மேல் அதன் உரிமையாளர்களிடம் இருந்து அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது
இப்படி அவர்களின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் இந்த அரசு கொள்ளையடிக்கும் நிலையில் அவர்களை பாதுகாக்க தவறுவது ஏன் அவர்களுக்கான ஒட்டுமொத்த வாழ்வாதாரத்திற்கான நிதியை அரசு உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்.
குறிப்பாக ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகனம் வைத்திருக்கும் நான்கரை லட்சம் ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பை முற்றிலும் இழந்துள்ளனர். அவர்களது குடும்பமும் இன்று ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
மோட்டார்வாகன துறையை சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள் அவர்களை காப்பாற்றுவது இந்த அரசின் கடமை.
அப்படி காப்பாற்ற தவறினீர்கள் என்றால் அவர்களை நீங்கள் படுகொலை செய்வதற்கு சமம்.
மே17 இயக்கம்
9884072010