தமிழ்தேசிய போராளி ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாள்

தமிழ் தமிழர் தமிழ்நாடு என தனது இறுதிமூச்சுவரை வாழ்ந்த தமிழ்தேசிய போராளி ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

தமிழர் உரிமையை நிலைநாட்ட தனது அரசு பணியை உதறிவிட்டு தமிழ்தேசிய களத்துக்கு வந்தவர்.

சாதி ஒழிந்த தமிழ்தேசியமே இழந்த தமிழர் உரிமைகளை மீட்க ஒரேவழி என தமிழகத்தின் பல ஊர்களில் தமிழ்தேசிய மாநாடுகளை போட்டு தமிழர்களை உணர்ச்சிபொங்கச்செய்தவர்.

தமிழர் உரிமை மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக சிறைதண்டனைஉள்ளிட்ட அரசின் பல அடக்குமுறையை எதிர்கொண்டவர்.

அபப்டிப்பட்ட ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரை நினைவில் ஏந்துவோம்.

தமிழர் உரிமைகளை மீட்க பாடுபடுவோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply