மிகவேகமாக தனியார்மயத்தை நோக்கி நகரும் மின்சாரத்துறை
மின்சாரத்துறையை முழுமையாக தனியாருக்கு கொடுத்துவிடவேண்டுமென்பதில் ஆளுகிற மோடி அரசு மிகத்தீவிரமாக வேலைசெய்துவருகிறது. அதன்படித்தான் மின்சாரத்திருத்தச் சட்டம் 2020ஐ சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த மசோதாவை சட்டமாக்கியே தீருவது என்கிறமுனைப்பில் இருக்கும் மோடி அரசு அதற்கான முதல்கட்டவேலையில் இருக்கிறது. அதாவது இரண்டு தினங்களுக்கு முன் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்சாரத் திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்திருக்கிறார்கள். அதில்
1.இந்தியா முழுமையும் மின்சார கட்டணங்கள் ஒரே மாதிரியாக கொண்டுவரவேண்டும்.
2.உலக நாடுகளில் இந்தியாவில் தான் மின்சார மானியங்கள் அதிகமாக கொடுக்கப்படுகிறது ஆகவே அதனை 20%ற்கும் கீழே குறைக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்.https://economictimes.indiatimes.com/…/article…/76143537.cms
இந்தியா முழுமையும் ஒரே கட்டணமென்றால் இனி தமிழகத்தில் 100யூனிட்க்கு மின்சாரம் இலவசம் அடுத்த 100யூனிட்டுக்கு இவ்வளவு, அடுத்த 100யூனிட்டுக்கு இவ்வளவு என்று இருக்கும் முறைகளெல்லாம் அடிப்பட்டுப்போகும். இலவச மின்சாரம் என்பதை தமிழக மக்கள் மறந்துவிடவேண்டியது தான்.இதனால் மின்சார கட்டணம் இரண்டுமடங்கு உயரும். அடுத்து மானியங்களை குறைத்தால் சிறு குறு விவசாயம் தொழில்துறை முற்றிலும் சிதைந்து போகும். குறிப்பாக தமிழகத்தில் தஞ்சை டெல்டா முற்றிலும் விவசாயத்தை சார்ந்தது அங்கு விவசாயமில்லையென்றால் அந்த நிலம் எதற்கு பயன்படும் அரசு அதை எதற்கு பயன்படுத்தும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. இபப்டி மிகமோசமான பாதிப்புகளை உருவாக்கக்கூடிய சட்டத்தைத்தான் நிறைவேற்ற மோடி அரசு துடிக்கிறது. மாநில அரசுகளும் இதனை நிறைவேற்றும் வேலைகளை கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் மின்சாரத்துறையில் பொறியாளர்கள், போர்மென், லைன் இன்ஸ்பெக்டர்ஸ் போன்ற பிரிவுகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன அதனை நிரப்பாமல் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களையே மீண்டும் குறைந்த சம்பளத்திற்கு ஒருநாளைக்கி 500ருபாய்க்கு மீண்டும் அமர்த்த நேற்று முந்தினம் 01.06.20 தமிழக மின்சாரவாரியம் முடிவு செய்திருக்கிறது. https://timesofindia.indiatimes.com/…/articles…/76150621.cms இவர்களால் வயது முதிர்வின் காரணமாக வேலை விரைவாக முடிக்கமுடியாமல் போனால் மக்கள் மத்தியில் மின்சாரவாரியத்தின் மேல் அவநம்பிக்கை வரும். அதை தனக்கு சாதகமாக பயனபடுத்திக்கொள்ளவும் முடியும் தனியாரை நோக்கி மின்சாரவாரியத்தை நகர்த்தினால் ஊழியர்களால் எந்தசிக்கலும் வராது என்ற சதியோடு இந்த வேலையை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மீண்டும் நியமிப்பது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மீண்டும் நியமிப்பது என்று செய்துவந்த தமிழக அரசு இப்போது மின்சாரத்துறையிலும் இதனை செய்கிறது.
ஆக மொத்தம் மத்திய அரசின் வழிகாட்டுதலில் அனைத்து அரசு துறைகளையும் தனியாருக்கு கொடுக்கும் வேலையை செவ்வனே தமிழக அரசு தொடங்கிவிட்டதைத்தான் இது காட்டுகிறது. மின்சாரத்துறை தனியார்மயமானால் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் சமூக நலன்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் தமிழ்நாடு 100ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் அபாயம் இருக்கிறது ஆகவே இந்த வீபரீதத்தை உணர்ந்து மக்கள் ஒன்றுபட்டு மத்திய மாநில அரசுகளின் மின்சார தனியார்மய சட்டத்தை எதிர்க்கவேண்டும்.
மே17 இயக்கம்
9884072010