தமிழினப்படுகொலை குற்றவாளிகளை காக்கும் இலங்கை அரசு:

- in ஈழ விடுதலை

தமிழினப்படுகொலை குற்றவாளிகளை காக்கும் இலங்கை அரசு

2009இல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பவுத்த பேரினவாத அரசு தொடர்ந்து அந்த இன்ப்படுகொலையை செய்த இராணுவ உயரதிகாரிகளை காப்பாற்றும் வண்ணம் பல நாடுகளின் தூதர்களாகவும், அரச பிரதிநிதிகளாகவும் நியமித்தது. இப்போது இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளியான 2009இல் இராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய இராசபக்சே ஜனதிபதியாக மாறியவுடன் தன்னுடன் சேர்ந்து யாரெல்லாம் தமிழர்களை இனப்படுகொலை செய்தார்களோ அவர்களை எல்லாம் இலங்கை அரசின் அதிகாரிகளாக நியமிக்கும் வேலையை மிகவேகமாக செய்கிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா
மேஜர் ஜெனரல் சத்தியப்பிரியா லியானகே
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க
பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ
மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா எகோடவேலா
அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ்
மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க
மேஜர் ஜெனரல் நந்தா மல்லவர்ச்சி
மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா
மேஜர் ஜெனரல் விஜிதா ரவிப்ரியா
மேஜர் ஜெனரல் தர்ஷனா ஹெட்டியாராச்சி
யப சேனாதிபதி
மேஜர் ஜெனரல் கே. ஜகத் அல்விஸ்
பிரிகேடியர் துவான் சுரேஷ் சல்லே
ஏஎஸ்பி பிரசன்னா டி அல்விஸ்

மேலே உள்ள அனைவரும் தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள் என்று பல்வேறு சர்வதேச விசாரனை ஆணையத்தால் குற்றச்சாட்டுக்கு உள்ளான இராணுவத்தினர்கள். இவர்களைத்தான் இலங்கையின் இராணுவதளபதிகளாகவும், பாதுகாப்பு செயலாளர்களாகவும், தேசிய புலனாய்வு அதிகாரிகளாகவும் நியமித்துவருகிறார் கோத்தபய இராசபக்சே. இன்னும் சொல்லப்போனால் அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சியையும் இனப்படுகொலை குற்றவாளிகளை காக்கும் வேலையையும் செய்கிறார்.

ஐந்து நாட்களுக்கு முன்னால் கூட இனப்படுகொலை குற்றவாளியான துவான் சுரேஷ் சாலே என்ற இராணுவ அதிகாரிக்கு மேஜர் ஜென்ரலாக பதவி உயர்வு வழங்கியிருக்கிறார். http://www.army.lk/…/newly-promoted-majors-general-call-the… இவர் 2009இல் மருத்துவமனைகளின் மீது இலங்கை அரசு குண்டுபோடுவதையும், தமிழ் பெண்களுக்கு கட்டாய கருகலைப்பு செய்யசொன்னதையும் சர்வதேசத்திற்கு சொன்ன தமிழ் மருத்துவர் துரைராஜா வரதராசன் என்பவரை மிரட்டியவர் மேலும் அந்த மருத்துவரை 10மாதங்கள் தடுப்பு காவலில் வைத்து சித்ரவதை செய்த குற்றவாளி. மேலும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கே கொலையின் விசாரணைக்காக அழைக்கப்பட்டவர். இப்படிப்பட்டவருக்கு பதவி உயர்வு வழங்கியிருக்கிறது கோத்தபய அரசு.

இப்படி இனப்படுகொலை குற்றவாளிகளை காக்க மிக வேகமாக வேலைசெய்யும் சிங்கள அரசின் சதியை சர்வதேச சமூகத்தின் முன் அம்பலப்படுத்த வேண்டிய மிகமுக்கியமான பொறுப்பு தமிழ் சமுகத்திற்கு முன் இருக்கிறது. ஆகவே பொய்களையும் புனைவுகளையும் பரப்பும் நபர்களின் பின்னால் சென்று அந்த பொய்யிலேயே லயித்து விடாமல் சிங்கள அரசின் சதியை உணர்ந்து தமிழ்சமூகம் விரைவாக களமாடவேண்டும். அதுவே இனபப்டுகொலைக்குள்ளான தமிழர்களுக்கான தீர்வை நோக்கி நகர வழிவகுக்கும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply