ஏகாதிபத்தியமே இனவெறியின் அடித்தளம்.
பார்ப்பனியமே சாதியத்தின் அடித்தளம்.
அமெரிக்காவில் நடக்கும் கருப்பின மக்களின் கலகம் அரசியல் தீர்வை முன்வைக்காது போகுமெனில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கேள்விகளை எழுப்பாமல் போகுமெனில் எவ்வித தீர்வுகளையும் அம்மக்களுக்கு அளித்துவிடாது.
’வெள்ளை இனவெறி’ ஏகாதிபத்திய நலனுக்காக வளர்க்கப்பட்ட கருத்தியல். அந்த நலனை எதிர்கொள்ளாமல் இனவெறியை வீழ்த்த இயலாது.
‘சுரண்டல்’ இல்லாமல் ’இனவெறி’ நிகழாது. ஏகாதிபத்தியத்தின் அடிப்படையே ‘சுரண்டல்’.
இந்த அமெரிக்காவின் வெள்ளை இனவெறி, இசுரேலின் யூதவெறிக்கு உரமூட்டுகிறது, பாலஸ்தீனத்தை சுரண்டுகிறது. பார்ப்பனியத்திற்கு உரமூட்டுகிறது, நம்மக்களை சுரண்டுகிறது. சிங்களப்பேரினவாதத்திற்கு உரமூட்டுகிறது, தமிழீழ மக்களை அழிக்கிறது.
’சுரண்டலை’ மிகத் திறமையாக நிர்வகிப்பதே அமெரிக்காவின் அரசு கட்டுமானம். அக்கட்டுமானத்தில் சலுகை பெறுவதற்காக நடக்கும் போராட்டங்கள் இறுதித் தீர்வையும், சுயமரியாதையையும் அம்மக்களுக்கு பெற்றுத்தராது.
இதே நிலை தான் பார்ப்பனியத்திற்கும். அரசர்களை, மக்களை சுரண்டும் கருத்தியலாக வளர்ந்த பார்ப்பனியம், இன்றும் நம்மைச் சுரண்டுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் சுரண்டலை ஒழிக்கவேண்டுமெனில், பார்ப்பனீயத்தை ஒழிக்காமல் நடக்காது என்றார் பெரியார்.
ஏகாதிபத்தியம், இனவெறி, பார்ப்பனீயம் இவையனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. எனவே தான் புலிகள் இவற்றிற்கு எதிராக மக்களை அணி திரட்டினார்கள்.
தொடர்ந்து மக்கள் அணி திரளட்டும்.
அரசியல் அறிவு ஈட்டட்டும்.
ஒரு நாள் உச்சாணிக் கொம்புகள் உடைபடும், சுரண்டல் வேரோடு வீழ்த்தப்படும்.
– தோழர் திருமுருகன் காந்தி