தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக முன்வைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் விதமாக மே 17, 2020 ஞாயிறு அன்று நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக இந்நிகழ்வு வீடுகளில் இருந்தபடியே மே 17 அன்று மாலை 6 மணியளவில் குடும்பத்தினரோடு, குறிப்பிட்ட இடைவெளியில் நின்றவாறு கோரிக்கை பதாகைகளோடு முழக்கமிடுவதும், 6:30 மணியளவில் மெழுகுவர்த்தி அல்லது விளக்கு ஏற்றுவது என்றும், சமூக வலைத்தளங்களில் காலை 10 மணி முதல் #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag பரப்புரையினை மேற்கொள்வது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு ஆதவளித்து பங்கேற்குமாறு தோழமை கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு மே பதினேழு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கையின் வாயிலாக ஆதரவளித்து, ஞாயிறு அன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி
கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு
SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன்,
திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுசெயலாளர் தோழர் கொளத்தூர் மணி,
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கோவை கு.ராமகிருஷ்ணன்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப்
தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன்
தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன்
திராவிட தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி
பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப உதயகுமார்
தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன்
டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தீபக் நாதன்’
தமிழர் விடுதலை கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்விற்கு ஆதரவளித்து, பங்கேற்ற தோழமை கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களுக்கும், தோழமைகளுக்கும் மே பதினேழு இயக்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது.

-மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply