மீண்டும் காவிரி டெல்டாவில் ONGC, பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டல அறிவிப்பு பொய்யா?
தமிழக அதிமுக அரசு பிப்ரவரி 20’2020இல் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சிறப்பு சட்டமியற்றி நிறைவேற்றியது. இதன் மூலம் இனி எந்தவொரு நிறுவனமும் காவிரி டெல்டாவில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தவிதமான வேலையும் செய்ய முடியாது.விவசாயம் மட்டுமேசெய்ய முடியுமென்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால் நேற்று இந்திய அரசின் எண்ணெய் நிறுவனமான ONGCக்கு தமிழ்நாடு குஜராத் ஆந்திரா அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் 49இடங்களில் எண்ணெய் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.business-standard.com/…/ongc-awards-49-marginal…
எந்த பணிக்கும் அனுமதியில்லை என்று சொல்லிவிட்டு எப்படி ஓ.என்,ஜி.சிக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுகிறது அப்படியென்றால் தமிழக அதிமுக அரசு அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு ஏமாற்று வேலையா? தமிழக அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
காவிரி டெல்டா தமிழர்களின் உயிருக்கு நிகரான சொத்து அதில் அரசியல் விளையாட்டை விளையாட வேண்டாம்.
மே17 இயக்கம்
9884072010