தமிழக அரசே! மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் 50 பேரை உடனடியாக மீட்டிடுக – மே17 இயக்கம்
தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
நாட்கள் செல்லச்செல்ல அவர்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே தரப்படுகிறதாம். மேலும் நல்ல குடிதண்ணீர் கூட தரப்படவில்லையாம். இதனால் இவர்கள் தங்களை சொந்த ஊருக்கே அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து பதில் எந்தவித பதிலும் தராத மகாராஷ்டிரா அரசு. இப்போது தீடிரென்று இரண்டு நாட்களுக்கு முன்னால் நீங்கள் ஏற்கனவே வேலை செய்த இடத்திற்கு சென்று விடுங்கள் என்று வலியுறுத்துகிறதாம்.
மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக கொரோனா எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் சொந்த ஊருக்கு அனுப்பாமல் அவர்களை மீண்டும் மகாராஷ்டிராவிற்கு பாதுகாப்பு இல்லாத இடத்திற்கே செல்லுங்கள் என்று வலியுறுத்துவது மனித நேயமற்ற செயல் .
ஆகவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு மகாராஷ்டிர அரசிடம் பேசி 50 தமிழகத் தமிழர்களையும் சிறப்பு ஏற்பாட்டில் தமிழகம் அழைத்து வந்து அவர்களின் குடும்பத்தோடு சேர்த்திட வேண்டும்.
மே17 இயக்கம்
9884072010