‘வீட்டிலிருந்தே குரலெழுப்புவோம்’ கவனயீர்ப்பு நிகழ்வு

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இருக்கிற மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘வீட்டிலிருந்தே குரலெழுப்புவோம்’ என்கிற கவனயீர்ப்பு நிகழ்வை தமிழகத்தில் இருக்கிற பல்வேறு இயக்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டமைப்பில் மே 17 இயக்கமும் அங்கம் வகித்தது.

அதன்படி நேற்று 26.04.2020 ஞாயிறு அன்று மாலை 5மணிக்கு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் வீட்டில் இருந்தபடியே மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை பதாகை ஏந்தி மே 17 இயக்க தோழர்களும் பொது மக்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள்.

கவன ஈர்ப்புக் கோரிக்கைகள்

இந்திய அரசே!
கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க.
1. உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!

2. நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!

3. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!

4. தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!

5. மருத்துவர்கள், செவிலியர்கள், நலவாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply