‘வீட்டிலிருந்தும் குரலெழுப்புவோம்’ என்கிற கவன ஈர்ப்பு இயக்கத்தின் நிகழ்விற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவு

அன்புடையீர், வணக்கம்!

‘வீட்டிலிருந்தும் குரலெழுப்புவோம்’ என்கிற கவன ஈர்ப்பு இயக்கத்தின் நிகழ்விற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவு

தோழர்களே!
நாம் புதுவிதமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறோம் தற்போது உலகையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் ‘கொரோனா’ தொற்று, வெறுமனே நோய்க்கூறாக மட்டும் இல்லாமல் அது ஒரு சமூக நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. சமூகநெருக்கடி பொருளியல் ,பண்பாட்டு நெருக்கடிகளை தருவிக்கிறது. இதை அரசு சரியான முறையில் கையாளுகிறதா என்பதை நாம் அவர்கள் கவனத்திற்கே கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எதிர்வரும் 26 – 04 – 2020 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கோரிக்கை எழுதிய அட்டைகளோடு, அவரவர் வீட்டு வாயிலில் அல்லது மாடியில் உரிய இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் நிற்று அதை முடிந்தால் நிழற்படமாக எடுத்து உங்கள் முகநூலில் பதிவிடுமாறு தமிழக மக்களை வேண்டிக் கொள்கிறோம்.

கவன ஈர்ப்புக் கோரிக்கைகள்

இந்திய அரசே!
கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க.
1. உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!

2. நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!

3. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!

4. தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!

5. மருத்துவர்கள், செவிலியர்கள், நலவாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!

நன்றி!
இப்படிக்கு,
மே பதினேழு இயக்கம்.

Leave a Reply