குஜராத்தில் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக தென்கொரியா பயன்படுத்திய வழிமுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக குஜராத் அரசு அறிவித்திருக்கிறது. அதென்ன தென் கொரியா மாடல் என்றால் வேறொன்றுமில்லை ’சோதனைகளை அதிகப்படுத்துவது’ மற்றும் ’தொடர் சோதனைகள் செய்வது’ இதன்மூலமே தென்கொரியா கொரனோ வைரஸ் நோயை அங்கு கட்டுக்குள் வைத்திருக்கிறது. அந்த வழிமுறையை தற்போது குஜராத் அரசு பயன்படுத்துகிறது என்பதற்கான செய்திதான் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.
இதனை தான் முதலிலிருந்து உலக சுகாதார நிறுவனம் சொல்லிக்கொண்டே வருகிறது. சோதனைகளை தொடர்ந்து செய்வதன் மூலமே இந்த நோயை கண்டறிந்து தடுக்கமுடியும். ஊரடங்கு என்பது சோதனைக்கான வழிதானே தவிர ஊரடங்கு மட்டுமே இந்த நோயை தடுக்காதென்று.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தனது ஈகோவின் காரணமாக இந்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை மார்ச் 18 ஆம் தேதியே மே 17 இயக்கம் அம்பலப்படுத்தி 130 கோடி மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்று எச்சரித்தது. பார்க்க படம் 2. இந்த உணமையை சொன்ன காரணத்தால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மீது வதந்தியை பரப்பிவிட்டது பிஜேபி.
ஆனால் இன்று இதுதான் சரியான வழிமுறை என்று பிஜேபி ஆளும் குஜராத் அரசு நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. காலம் கடந்தது என்றாலும் பாராட்டவேண்டிய செயல். ஆகவே இப்போதாவது மோடி அரசு ஈகோ பார்க்காமல் 130 கோடி மக்களின் நலன்கருதி சோதனைகளை அதிகப்படுத்தும் வழிமுறையை இந்தியாவெங்கும் செயல்படுத்தவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
மே 17 இயக்கம்
9884072010