பிஜேபியால் திட்டமிட்டு உருவாக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு – ஓர் உதாரணம்
நாடுமுழுவதும் பிப்ரவரி வரை குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகக்கடுமையாக நடந்துவந்தது. அதில் முன்னனி களத்தில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள். இது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை நாளுக்குள் நாள் கொடுத்துக்கொண்டே வந்தது. இதை எப்படி சமாளிப்பது என்று இல்லாத மூளையை கொண்டு யோசித்துக்கொண்டிருந்த பிஜேபியினருக்கு அல்வா சாப்பிடுவது போல கிடைத்தது தான் இரண்டு விசயங்கள். ஒன்று கொரானோ தொற்று நோய் இரண்டு தப்ளித் ஜாமத் மாநாடு.
குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டம் இந்த மோசமான கொரானோ தொற்றுநோயால் தற்போது இல்லாமல் போயிற்று. ஆனாலும் தொற்று குறைந்தபிறகு மீண்டும் இஸ்லாமியர்கள் போராட்டத்தின் முன்னனி களத்திற்கு வந்தால் என்னசெய்வது மேலும் அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு பொதுச்சமுகத்தின் ஆதரவும் கிடைத்துவிட்டால் தங்களின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் என்ற இருந்த நிலையில் தான் தப்ளீக் ஜமாத் மாநாடு அவர்களுக்கு கிடைத்தது. இதனை வைத்து முஸ்லீம்கள் தான் கொரனா தொற்று இந்தியா முழுக்க பரவக்காரணமென்று ஒரு பொய்யை திட்டமிட்டு பிஜேபி பரப்ப அதற்கு ஏற்றவாறு இன்றுவரை பிஜேபியின் ஐ.டி விங்குகள் இல்லாத பொய்களையெல்லாம் கற்பனை கட்டி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுதி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதனை சில ஊடகங்களின் வழியாகவும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு சமீபத்திய உதாரணம் வேண்டுமென்றால். கடந்த ஏப்ரல் 01 ஆம் தேதி தேசிய ஊடக மையத்தில் வைத்து மத்திய சுகாதாரத்துறையின் இணைச்செயலாளர் லால் அகர்வால் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பில் இதுவரை இல்லாமல் சுகாதாரத்துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இவ்வளவு முக்கியமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் மூன்றே மூன்று பத்திரிக்கையாளர்கள் மட்டுமே கேள்விகேட்கவேண்டுமென்று இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளார்கள்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அனைவருமே தப்ளிக் ஜாமத் மாநாடு குறித்து மட்டுமே பேசியிருக்கிறார்கள். கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்ட முன்று பத்திரிக்கையாளரும் தப்ளிக் ஜாமாத் மாநாடு பற்றியே கேள்வி கேட்டிருக்கிறார்கள். இது முடிந்ததும் சந்திப்பு முடிந்தது என்று அனைத்து கேமராக்களையும் அணைக்கச் சொல்லிவிட்டு வேகமாக கிளம்பியிருக்கிறார்கள்.
இதுகுறித்து செய்தி சேகரிக்கச்சென்ற மற்ற பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கை கவுன்சிலில் அணுகியிருக்கிறார்கள். 60 லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் நாடுமுழுவதும் கூட்டம் கூட்டமாக பயனபட்டு சொந்த ஊருக்கு போயிருக்கிறார்களே அவர்களை எப்படி சோதனை செய்யப்போகிறீர்கள் அது குறித்து ஒரு வார்த்தையும் இல்லாமல் இப்படி ஏன் அவசர அவசரமாக கூட்டத்தை முடிக்க வேண்டுமென்று கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். உடனே பத்திரிக்கை கவுன்சில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அனைவரும் சொல்லிவைத்தார்போல் சுவிட்ஸ் ஆப் செய்திருக்கிறார்கள். பிறகு மின்னஞ்சலும் அனுப்பியிருக்கிறார்கள் எதற்கும் பதில் இல்லையென்று கேரவன் இதழ் மிகவிரிவாக இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது. https://caravanmagazine.in/…/centre-places-restrictions-med…
இதிலிருந்து திட்டமிட்டு இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பை இந்தியா முழுக்க உருவாக்க வேண்டுமென்ற் நோக்கம் பிஜேபிக்கு இருப்பது தெளிவாக தெரிகிறது. அரசு, ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது தானே, அதைதானே இந்திய அரசியலமைப்பு சட்டமும் சொல்கிறது. ஆனால் அதற்கு விரோதமான அனைத்து வேலையையும் மோடியின் பிஜேபி அரசு செய்கிறது. மக்களை மதத்தைக்கொண்டு பிரிக்கிறது.
இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை புரிந்துகொண்டு நடைபோடுவோம்.
மே 17 இயக்கம்
9884072010