கொரானோ நோய் தடுப்பு பணியிலிருக்கும் மருத்துவர்களை அம்போவென விட்ட மோடி அரசு
மிக மோசமான இந்த கொரானோ வைரஸ் உலகமெங்கும் உள்ள மக்களை பாடாய்படுத்துகிறது, இதிலிருந்து மக்களை காக்கும் மருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் அரசுகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.ஆனால் இந்தியாவில் மருத்துவர்களுக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படாமல் அவர்களை சாவின் விளிம்பில் நிற்க வைத்திருக்கிறது மோடி அரசு.
உலகம் முழுவதும் கொரானோ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மூன்று அடுக்கு வளையம் கொண்ட பாதுகாப்பு உடை மற்றும் முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இரண்டு அடுக்கு வளையம் மற்றும் சாதாரண முகக்கவசம் ஆகியவையும் சில இடங்களில் அதுவும் இல்லாமல் மருத்துவர்கள் மழைக்கு பயன்படுத்தும் உடையையும் (ரெயின் கோட்) முகக்கவசத்திற்கு பதிலாக ஹெல்மெட்டை பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலை உலக செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டது.https://mobile.reuters.com/article/amp/idUSKBN21I0X0…
இப்படி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரானோ தொற்று பரவியிருக்கிறது என்கிற அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. மருத்துவர்கள் இருந்தால் தான் மருத்துவம் பார்க்கமுடியும் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இருக்கும் இந்த கூட்டம் தான் மருத்துவர்களுக்காக நாம் கைதட்டுவோம் விளக்கு புடிப்போமென்று சொல்லி நம்மை இந்த பிரச்சனையில் இருந்து திசை திருப்புகிறது.
இதைவிடக்கொடுமை மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சாதனங்கள் வாங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ’பாரத் டைனமிக்ஸ்’ என்ற நிறுவனம் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி செய்தால் அதனை யாருக்கும் சொல்லாமல் மத்திய அரசு தனது மோடி நிவாரண நிதிக்கு எடுத்து கொண்டிருக்கிறது.
https://www.thehindu.com/…/50-lakh-mea…/article31234339.ece…
மத்திய அரசு தான் நிதி ஒதுக்கமால இருக்கிறது கொடுப்பவர்களையும் தடுத்தால் அரசின் நோக்கம்தான் என்ன என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதனையெல்லாம் பொறுத்து பார்த்த மருத்துவர்கள் தற்போது தங்களது உயிர்களை காக்க இந்த இக்கட்டான நேரத்தில் கூட போராட வேண்டிய சூழ்நிலையை மத்திய மோடி அரசு உருவாக்கியிருக்கிறது. https://economictimes.indiatimes.com/…/articl…/75004411.cms…
கார்ப்ரேட் முதலாளிகளுக்கு ஒரு பிரச்சனையென்றால் உடனடியாக வேலை செய்யும் மோடியின் நிர்வாகம் மக்களை காக்கும் மருத்துவர்களுக்கு வேலை செய்யச்சொன்னால் அவர்களை அம்போவென நிர்கதியாக விட்டுவிட்டு ஒலி எழுப்புங்கள் ஒளி ஏற்றுங்கள் என்று கொரானோவுக்கு எதிராக கொரளி வித்தை காட்டிக்கொண்டிருக்கிறது.
மே 17 இயக்கம்
9884072010