இதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்.
இதையெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்பதால் தான் “அரசியல் பேசலாமா, இதில் அரசியல் செய்யலாமா, குறை சொல்லும் நேரமா இது’ என்கிறார்கள்.
இந்தப்படங்களில் குழந்தைகளுடன் அலைமோதுகிறவர்கள் இராமாயணமும் பார்க்கப்போவதில்லை, அரசை நோக்கி கேள்வி கேட்கும் வாய்ப்பு கொண்டவர்களுமில்லை.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு விமானம் அனுப்பிய அரசு, அன்றாடங்காய்ச்சிகளுக்கு ரயிலை ஏற்பாடு செய்யவில்லை. இதில் எத்தனைப் பேர் ‘நோயுடன்’ ஊர் போய் சேருகிறார்களோ?, எத்தனைப் பேரை இந்த அரசு பாதுகாக்கப் போகீறதோ?. ஊர் போய் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு நாள் உணவு இருக்குமோ?…
வீட்டில், பசியாறி உறங்கிக் கொண்டிருக்கும் நம் குழந்தைகளை பார்க்கும் அதே நேரத்தில் நமக்கு ஏன் இந்தக் குழந்தைகளும் கண்களுக்கு வராமல் போகிறார்கள்?… அப்படி இவர்களும் உங்கள் கண்களில் பட்டால் நீங்களும் ‘அரசை நோக்கி கேள்வி கேட்பீர்கள் தானே?’
-தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு