குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஐநா மனித உரிமை கமிஷன் வழக்கு பதிவு, மோடி அரசிற்கு வலுக்கும் சர்வதேச நெருக்கடி – மே17 இயக்கம்
கடந்த வாரம் ஐநாவின் மனித உரிமை கவுன்சிலின் உயரதிகாரி மிச்சேல் பேச்லெட் இந்தியாவில் சமிபத்தில் மோடி அரசால் கொண்டுவரபட்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தையும் அதன் விளைவாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதற்கும் மிகக் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.மேலும் அவர் இந்த சட்டம் இந்தியா ஏற்று கையொப்பமிட்டு இருக்கிற சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் ஐநாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவரே வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கு நாளை எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்பப்படுகிறது.
இதோடு ஏற்கனவே ஐநா மனித உரிமை கமிஷனின் சிறப்பு பிரதிநிதி இந்தியாவிலிருந்து ரோகிங்கிய இஸ்லாமியர்களை திருப்பி அனுப்புவது சட்டவிரோதமானது என்று ஒரு வழக்கையும் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் ஐநா தலையீடு செய்திருக்கிறது. இது சர்வதேச அளவில் மோடி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும்.
ஐநாவின் பல்வேறு நடவடிக்கையின் மீது நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கிற போதிலும், இப்போது இந்த இக்கட்டான சூழ்நிலையில் எடுத்திருக்கிற இந்த நடவடிக்கை என்பது மோடியின் பாசிச நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கும் என்கிற வகையில் ஐநா மனித உரிமை கமிஷனின் இந்த நடவடிக்கையை மே 17 இயக்கம் வரவேற்கிறது.
மே 17 இயக்கம்
9884072010