குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான முதல்வரின் பல்வேறு பொய்கள் அவரின் கடிதம் மூலமே அம்பலம்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான முதல்வரின் பல்வேறு பொய்கள் அவரின் கடிதம் மூலமே அம்பலம்

குடியுரிமை திருத்தச்சட்டத்தால் இந்தியாவில் இருக்கிறவர்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று மத்திய மோடி அரசு பாடும் அதே பல்லவியை அப்படியே சுருதி மாறாமல் தமிழக எடப்பாடி அரசும் பாடுகிறது. அதன் உச்சமாக முன்று நாட்களுக்கு முன் இன்னும் அமல்படுத்தப்படாத குடியுரிமை திருத்தச்சட்டத்தால் எத்தனை இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை உங்களால் கூற முடியுமா? என்ற ஒரு ’கிடுக்குப்பிடி’ கேள்வியை எதிர்கட்சிகளைப்பார்த்து மிகுந்து கோவ ஆவேசத்தோடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டார்கள்.

ஆனால் இன்று நாளிதழ்களில் வந்த ஒரு செய்தி முதல்வர் பொய் பேசுகிறார் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. அதுவும் அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாகவே அவர் அம்பலப்பட்டிருக்கிறார் என்பது தான் சிறப்பே. அதாவது நேற்று தமிழக அரசின் சார்பில் 2020இல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் (NPR) தாய்மொழி, தாய், தந்தை, துணைவர் ஆகியோரின் பிறப்பிடச்சான்று, பிறந்த தேதிக்கான சான்று, மொபைல் நம்பர், ஆதார் எண் மற்றும் ஒட்டுனர் உரிமை எண் ஆகிய்வற்றை தவிர்க்க வேண்டுமென்று கேட்டு ஒரு கடித்தத்தை மத்திய அரசுக்குஅனுப்பியிருக்கிறது. (தினமலரில் வந்த செய்தி இணைக்கப்பட்டுள்ளது). இந்த கடித்ததின் வாயிலாக கீழ்க்கண்ட இரண்டு மிகமுக்கியமான மத்திய மாநில அரசுகளின் பொய்கள் அம்பலமாகிறது.

1.மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) என்கிற பெயரில் குடிமக்கள் பதிவேடு (NRC)யையும் சேர்த்து செய்கிறது .

2.குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்புமில்லை குறிப்பாக இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றால் ஏன் மேற்கண்ட தகவல்களை நீக்க வேண்டுமென்று மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.

ஆக குடியுரிமைதிருத்தச்சட்டத்தால் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்கள், இந்துகள் ஆதிவாதிகள், இந்து என்று நம்புபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதிப்பு இருக்கும் என்பதை இதவிட விளக்க சிறந்த சான்று தேவையில்லை. ஆக இனியாவது பெரும்பான்மை மக்களுக்காகவும் சேர்த்து இந்தியாவெங்கும் போராடும் இஸ்லாமியர்களோடு அனைவரும் கைகோர்த்து இந்த சட்டத்திற்கு எதிராக போராடவேண்டும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply