குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது கடைந்தெடுத்த பொய்
மத்திய பிஜேபி அரசும் சரி, மாநிலத்திலும் இருக்கிற அதிமுக அரசும் சரி இன்னும் குடியுரிமை திருத்தச்சட்ட்டத்தை ஆதரிக்கிற பலரும் சொல்வது இந்த சட்டத்தால் இந்தியர்கள் யாரும் இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்புமில்லை வேண்டுமென்றே எதிர்கட்சிகள் மற்றும் சில இயக்கங்கள் மக்களை தூண்டிவிடுகிறார்களென்று எப்போதும் பாடும் பல்லவியையே அரசு பாடுகிறது. இது உண்மையா?சற்று பார்ப்போம்
இரண்டு தினங்களுக்கு முன் அசாம் கவுகாத்தி நீதிமன்றத்தில் முனீந்திர பிஸ்வாஸ் என்பவர் அனைத்து ஆவணங்களையும் காட்டியும் எனது குடியுரிமையை பறித்துவிட்டார்கள் என்று ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில் அவர் அரசிடம் தான் இந்திய குடிமகன் தான் என்பதற்கு தனது வாக்களார் அடையாள அட்டை, அரசு வழங்கிய நிலப்பட்டா உள்ளிட்ட 14 அரசு ஆவணங்களை சமர்பித்திருக்கிறார். அப்படியிருந்தும் எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தரப்பு வாதத்தை வைத்திருக்கிறார். இதை விசாரித்த நீதிமன்றமும் நிலப்பட்டாவும், வாக்காளர் அடையாள அட்டையும் குடியுரிமைக்கு ஆதாரம் ஆகாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. பார்க்க படம் 01& 02
ஆக பிறப்பு சான்றிதழ் மட்டுமே குடியுரிமையை நிரூபிக்க ஒரே வழி என்று இந்த தீர்ப்பின் மூலம் புரிந்துகொள்ளமுடிகிறதா? அப்படியென்றால் குடிமக்கள் பதிவெட்டிலும் சரி, மக்கள் தொகை பதிவேட்டிலும் சரி அவர்கள் கேட்கப்போவது இதை தான். இதனை காட்டியவர்கள் இந்திய குடிமக்கள். இதை காட்டாதவர்கள் ‘D’ DOUBTFUL’ சந்தேகத்திற்கு உரியவர்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். அவர்கள் தனது பிறப்பு சான்றிதழ் மட்டுமில்லை தனது தந்தையின் பிறப்பு சான்றிதழையும் காட்டவேண்டும். ஒருவேளை மகனுக்கு இருந்து அப்பாவுக்கு இல்லையென்றாலும் அவர் குடிமகன் கிடையாது.
இப்போது சொல்லுங்கள் இந்தியாவில் வாழும் எத்தனை பேரிடம் பிறப்பு சான்றிதழ் இருக்கிறது அல்லது அவர்களுடைய அப்பாவுக்கு பிறப்பு சான்றிதழ் இருக்கிறதென்று. இதைவிட கொடுமை 1969 இல் தான் முதன்முதலாக இந்தியாவில் பிறப்பு இறப்பை பதிவு செய்யும் சட்டமான ‘பிறப்பு இறப்பு பதிவு செய்யும் சட்டம் 1969’ Registration of Births and Deaths Act (RBD Act), 1969 அறிமுகப்படத்தப்பட்டது. அப்படியென்றால் 1969க்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் இருக்காதே, அப்படியென்றால் 1969க்கு முன் பிறந்தவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் இந்திய குடிமகன் இல்லை என்றாகிவிடுகிறதே. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமில்லை இந்தியாவில் இருக்கிற அனைவரையும் பாதிக்குமா பாதிக்காதா?
இந்தியாவை பொறுத்தவரை
3கோடி பேர் நிலமற்றவர்கள்
17லட்சம் பேர் முகவரி (வீடு) இல்லாதவர்கள்
1.50கோடி பேர் நிரந்தர இருப்பிடம் இல்லாதவர்கள்
8கோடி பேர் பழங்குடியினர் இவர்களெல்லாம் தங்களது பிறப்பு சான்றிதழை எப்படி காட்டுவார்கள் சற்று சிந்தியுங்கள்.
நிலைமை இப்படி இருக்க மத்திய மாநில அரசுகள் மீண்டும் மீண்டும் இந்திய குடிமக்களுக்கு ஒரு பாதிப்புமில்லை என்று பேசுவது பொய் இல்லாமல் வேறென்ன? அசாமின் முதல் பெண் முன்னால் முதல்வருக்கே குடியிரிமையை மறுத்துவிட்டு (பார்க்க படம்03) யாருக்கும் பாதிப்பில்லை என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். இந்த பொய்யை நம்பாமல் தான் இந்திய மக்கள் அனைவருக்காகவும் சேர்த்து இன்று பல்வேறு சித்ரவதைகளையும் தாண்டி இஸ்லாமியர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் நியாயமான போராட்டத்தில் நாமும் இணைவோம் பாசிசவாதிகளை தனிமைப்படுத்துவோம் தூக்கியெறிவோம்.
மே17 இயக்கம்
9884072010