நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 15-02-20 அன்று மாலை நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.