மாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்

2009இல் ஈழ இனவழிப்பை தடுக்கக்கோரி ’தமிழகமே திரெண்டு எழு’ என்று அறைகூவல் விடுத்து தன் உயிரையே அதற்காக தந்த மாவீரன் முத்துக்குமாரின் வழியொற்றி ’உலக சமூகமே என் தமிழர்களை கொலைசெய்யப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்’ என்று உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப தன் உயிரை ஐ.நா முற்றத்தில் 12.02.2009 அன்று தந்தவன் மாவீரன் முருகதாசன்.
”ஈழத்தில் பிறந்த குழந்தைகள் கொல்லப்படுகிறார்களே, சிறார்கள் கொல்லப்படுகிறார்களேஅதனினும் கொடுமையாக வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்கிறார்களே அதுவுமா பயங்கரவாதி? மக்களை கொல்வது பயங்கரவாதம் என்று நீங்கள் வகுத்தழித்த அரசியல் சாசனங்கள் சொல்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது அதை பயங்கரவாதமென்று சொல்லாமல் இருக்கிறீர்களே இது என்ன நியாயம்? உங்கள் அரசியல் சாசனமெல்லாம் தமிழர்களுக்காக இல்லையா? என்று ஐ.நா முற்றத்தில் வாய் இருந்தும் பேசாமல், கண்ணிருந்தும் காணாமல், காது இருந்தும் கேட்காமல் இருந்த உலக நாடுகளை கேட்டவன் மாவீரன் முருகதாசன்.
ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அறிவாயுதம் கொண்டு தங்களது விடுதலையை கேட்போம். ஒருநாள் சுதந்திரத்தின் கதவுகள் நமக்காகத் திறக்கும் என்ற சொன்ன முருகதாசனின் 11ஆவது நினைவை ஏந்தி முன்னேறுவோம்.
இன்று மாறி நிற்கும் உலக சூழ்நிலையில் தமிழீழம் தமிழர்களுக்கான பாதுகாப்பு மட்டுமல்ல, தெற்காசியாவின் பாதுகாப்பு அரணாகவும் தமிழீழம் தான் விளங்கும். இதனை புரிந்து கொண்டு உலக தமிழர்கள் நமது வேலைதிட்டத்தை அறிவாயுத்தை செலுத்தினால் தமீழீழம் வெகுவிரைவில் அமையும்.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
காரிகாலன் பூமியில் புலிக்கொடி பறக்கும்.
மே17 இயக்கம்
9884072010
