டெல்லியில் அரங்கேறும் தூத்துக்குடி பாணி துப்பாக்கிச்சூடு: பாசிச மோடி அரசே மக்கள் போராட்டங்களை துப்பாக்கிகளை கொண்டு நசுக்காதே!
டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின் வெளியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தியின் 72ஆவது நினைவுநாளில் அமைதி பேரணி நடத்த மாணவர்கள் சேர்ந்திருந்தனர். அந்த சமயத்தில் தீடிரென்று அந்த பேரணியை நோக்கி ஒருவர் கைதுப்பாக்கியால் சுட ஆரம்பித்திருக்கிறார்.இதில் தலையில் குண்டடிபட்டு படுகாயமடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாக செய்திகள் வருகிறது. டெல்லியில் நடந்த இந்த சம்பவம் என்பது நமக்கு தூத்துக்குடியில் காவல்துறை அப்பாவி மக்கள் 13பேரை துப்பாக்கியால் சுட்ட நிகழ்வை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.
டெல்லியிலும் கோபால் என்கிற ஒருவர் துப்பாக்கியுடன் பேரணியை நோக்கி சுட்டுக்கொண்டே ’ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ டெல்லி போலிஸ் ஜிந்தாபாத் என்று கத்திக்கொண்டே சுடுகிற விடியோக்களும் அவரின் புகைப்படங்களையும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. https://indianexpress.com/
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கும் தங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று வழக்கம்போல பிஜேபி சொல்லும்.ஆனால் டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் துரோகிகளை சுட்டுவிடு’ என்று பேசினார் இதற்காக தேர்தல் ஆணையம் அவர் 3நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தடைவிதித்திருக்கிறது என்பது வேறு. ஆனால் அவரின் அந்த பேச்சின் எதிர்வினையாகத்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்கிறது. ஆகவே இந்த துப்பாக்கிச்சூடு முழுக்க முழுக்க பிஜேபி அரசின் தூண்டுதலில் தான் நடந்திருக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரம்.ஆகவே இதற்கு காரணமான பிஜேபி அரசை பதவி விலகக்கோருவோம்.
மக்கள் போராட்டங்களை துப்பாக்கிகள் ஒருபோதும் தடுத்து நிறுத்தியதாக வரலாறு நெடுக எங்கினும் இல்லை என்பதை பாசிச மோடி அரசுக்கு புரியவைப்போம்.
மே 17 இயக்கம்
9884072010