CAA,NRC,NPR போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக நேற்று (29-01-2020) தூத்துக்குடியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.