சனவரி 29, 2009..தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்!
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களை அரசியலை நோக்கி இழுத்தவன்!
மே பதினேழு இயக்கம் உருவாகிட மூல காரணமாய் இருந்தவன்!
தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த மிக முக்கியமான மரண சாசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, தன் உடலை இளைஞர்கள் கையில் ஆயுதமாக கொடுத்துச் சென்ற மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க நாள் இன்று!
தன் உடலை ஆயுதமாகக் கொடுத்துவிட்டு, இளைஞர்களை அறிவாயுதம் ஏந்த சொன்னான் முத்துக்குமார்.
தமிழினத்திற்காக தான் உயிர்த்தியாகம் செய்யும் நாளை “இன்று என் வாழ்வின் பொன்னானதொரு நாள்” என்று எழுதி வைத்திருந்தான் முத்துக்குமார்.
தீக்குளித்து உயிர் பிரியும் வேளையில் மருத்துவமனையில், காவல்துறையினர் மருத்துவமனையில் வைத்து, உன் சாதி என்ன என்று கேட்கும் போது, “என் சாதி தமிழ் சாதி” என சொல்லிவிட்டு மரணித்தான் அந்த உன்னத மாவீரன்!
அந்த முத்துக்குமாரே மே பதினேழு இயக்கத்தின் தலைவன்!
முத்துக்குமார் நினைவைப் போற்றுவோம்! தமிழீழம் வெல்வோம்!
வீரவணக்கம்!
– மே பதினேழு இயக்கம்
9884072010