மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடியதற்காக அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்கள், அவர் மீதான அனைத்து பொய் வழக்குகளையும் உடைத்து நேற்று (14.01.2020) காலை கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
தோழரை கோவை மத்திய சிறையில் வாசலிலேயே மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மாலை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் அங்கிருந்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு எதிரே இருக்கிற பெரியார் படிப்பகத்தில் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு வரவேற்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் திரளாக கலந்து கொண்டு சிறை சென்று விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களை வரவேற்றார்கள்.