நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடான “லத்தீன் அமெரிக்கா – ரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு” புத்தகத்தின் வெளியீட்டு விழா, 03-01-2020 அன்று, சென்னை பெரியார் திடல் மணியம்மை அரங்கில் நடைபெற்றது. புத்தகத்தை ஓவியர் மருது அவர்கள் வெளியிட எழுத்தாளர் அமரந்த்தா அவர்கள் பெற்றுக்கொண்டார். இவர்களோடு இளம் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
லத்தின் அமெரிக்க மக்களின் வரலாற்றை பேசும் இந்த புத்தகம் தற்போது சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில், நிமிர் பதிப்பகத்தின் அரங்கில் (அரங்கு எண்: 64-65) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு
9884072010