பழமைவாத குப்பைகளை அடித்து நொறுக்கி பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலேவின் பிறந்தநாள் இன்று

பழமைவாத குப்பைகளை அடித்து நொறுக்கி பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலேவின் பிறந்தநாள் இன்று.

இந்தியாவில் பெரும்பான்மை பெற்று விட்டோமென்று இந்த நூற்றாண்டிலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கக்கூடாது என்று நீட் போன்ற சமூக கொடுமைகளை அரங்கேற்றும் பழமைவாத கும்பல்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எப்படியெல்லாம் கொடுமை செய்திருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள்.

அப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளுக்குள்ளும் தன்னுடைய வாழ்விணையர் ஜோதிராவ் புலேவின் ஆதரவு மட்டுமே ஆறுதலாக இருக்க, இந்த பழமைவாத கும்பல்களை எதிர்த்து போராடி வென்றார் ஒரு பெண் வெற்றி பெற்றார்களென்றால் அந்த வரலாறுக்கு சொந்தமானவர் தான் சாவித்திரி பாய் புலே.

பிறப்படுத்தப்பட்ட சாதி எனும் அடையாளம் காணப்படும் சாதியில் பிறந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்களுக்கு மறுக்கப்படும் கல்வி உரிமைக்காக போராடி 1846ஆம் ஆண்டில் பள்ளியை தொடங்கியவர். ஒடுக்கப்ப்பட்ட மாணவர்களுக்கு கல்வி சொல்லிகொடுக்க யாரும் முன்வராத பட்சத்தில் தானே படித்து பள்ளியை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் நடத்தி வெற்றி பெற்றார்.

தீண்டாமை எதிர்ப்பு, விதவை மறுமணத்தை ஆதரித்தல், மனித உரிமைகள் காப்பு என்று தனது சமூக சிந்தனையை அகலவிரித்து அதில் வெற்றியும் கண்டவர். மாகாராஷ்டிராவில் பிளேக் நோய் பரவிய போது பலரும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வராத போது தனது வளர்ப்பு மகனோடு சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர். அதனாலேயே பிளாக் நோய் தாக்கி தனது 66வயதில் மறைந்து போனார்.

சமூக விடுதலை களத்தில் இயக்கும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு இவரின் வாழ்க்கை பெரும் ஒளிவிளக்காக இன்றும் இருக்கிறது. அவரின் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடுவோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply