1.தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு ஒப்புதல்
2.சுவிஸ் வங்கி கணக்கு விபரங்களை வெளியிடத் தேவையில்லை.
3.ஏழு மாநிலங்களில் நிலத்தடி நீரை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் அடல் ஜல் திட்டத்திற்கு ஒப்புதல்.
4.முப்படைக்கும் ஒரே தலைமை தளபதியை நியமிக்க ஒப்புதல்
5.திவால் சட்டத்தில் இரண்டாவது திருத்ததிற்கு ஒப்புதல்
6.இந்திய இரயில்வேயை மறுசீரமைக்க ஒப்புதல்
இவையாவும் மக்கள் விரோத முடிவுகள். உதாரணத்திற்கு.
1.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒப்புதல்
குடியுரிமை திருத்த சட்டம் 2019 மற்றும், தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்,சி) ஆகிய இரண்டு ஒன்றோடொன்று ஒன்று தொடர்புடையது. இதனைதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது நாங்கள் முதலில் குடியுரிமை சட்டத்தை கொண்டுவருவோம் அடுத்து தேசிய குடியுரிமை பதிவேட்டை நடைமுறைப்படுத்தவோமென்று சொன்னார்.
ஏற்கனவே குடியுரிமை சட்டத்திற்கே இந்தியாவெங்கும் போராட்டம் வெடிக்கிறது இப்போது என்.ஆர்.சியை நேரடியாக கொண்டு வந்தால் மேலும் போராட்டம் தீவிரமடையும் என்பதற்காக மறைமுகமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் குடியுரிமை பதிவேட்டை செய்ய இருக்கிறார்கள். இதை அமித் ஷாவும் மோடியும் மறைத்து பொய் பேசலாம் ஆனால் குடியுரிமை (குடிமக்கள் ஒழுங்குபடுத்தல் மற்றும் அடையாள அட்டை வழங்கல்) விதிகள் 2003இல் தெளிவாக சொல்லுகிறது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தொகுப்பு என்பது தேசிய குடியிரிமைப் பதிவேடு தயாரிப்பை நோக்கிய முதல்படி என்று. ஆக ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் 50ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழுகிற இசுலாமிய ஈழத்த தமிழ்ர்களை வைத்தத மோடி இப்போது மறைமுகமாக ஒட்டுமொத்த இஸ்லாமிய மற்றும் தமிழ் உள்ளிட்ட தேசிய இனத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காணும் என்.ஆர்.சிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
2.நிலத்தடி நீர் ஆய்வு:
தண்ணீரை தனியார்க்கு கொடுக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டம் தான் இந்த ஏழு மாநிலங்களில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் புதிய ’அடல் ஜல் திட்டம்’. நீலத்தடி நீரை மேம்படுத்துகிறோமென்று இனி தண்ணிரை வீணாக்காதீர்கள் என்று சொல்லி கட்டணம் வசூலிப்பார்கள், பின் அதனை வசூலிக்கும் உரிமையை தனியாரிடம் எப்படி கோவையில் சூயஸ் நிறுவனத்திற்கு கொடுத்தார்களோ அதேபோல கொடுப்பார்கள். இறுதியில் தண்ணீர் அத்தியாவசிய பொருள் என்ற நிலையிலிருந்து பணம் இருப்பவர்களுக்கு மட்டும் என்று உலக வர்த்தக கழகத்தின் வழிமுறையை இந்தியாவெங்கும் புகுத்துவார்கள். நேரடியாக தன்னியார் தனியார் மயம் என்று சட்டம் போடாமல் மறைமுகமாக துணைச்சட்டம் போட்டு அதன் மூலம் தண்ணீரை தனியாருக்கு தாரை வார்ப்பார்கள். இதற்காகவே இந்த புதிய திட்டம். இதற்கு தான் நேற்று ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.
3.இரயில்வே துறை மறுசீரமைப்புக்கு ஒப்புதல்:
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும் வேலையை எது நடக்கிறதோ இல்லையோ இந்த வேலை மிகத்துரிதமாக நடக்கிறது. பாரத் பெட்ரோலியம், சேலம் உருக்கு ஆலை, பி.எஸ்.என்.எல், இப்படி தனியாருக்கு போகக்கூடிய பட்டியலில் இரயில்வேயை எப்படியாகினும் சேர்த்துவிடவேண்டுமென்று இரயில்வே அமைச்சர் பீயூஸ் கோயல் படாதபாடு படுகிறார். ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட வழிதடங்களை தனியாருக்கு கொடுக்கப்பட்டு அங்கு தனியார் இரயில்கள் மிக அதிக கட்டணத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரயில்வேயின் மிகமுக்கியமான நிர்வாக அமைப்பான IRCTCயின் பெரும்பகுதிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.
இதுபோதாதென்று இப்போது இரயில்வேயில் இயங்கும் பல்வேறு துறைகளை இணைக்கும் வேலையை மறுசீரமைப்பு என்ற பெயரில் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. துறையை இணைத்தால் என்னவாகும் வேலை இழப்பு ஏற்படும். பின் வேலை பளு அதிகமாகும். அதனால் தவறுகள் அதிகம் நடக்கும்.தவறு நடந்தால் மக்கள் மத்தியில் கெட்டபெயர் வரும் பின் எளிமையாக மொத்தத்தையும் தனிருக்கு கொடுத்து விடலாம். எப்படி BSNLஜ ஒழித்துக்கட்டினார்களோ அதேபோல இரயில்வேயையும் ஒழித்துவிடலாம்.
இவையெல்லம் மிக சில உதாரணங்கள் நேற்று கூட்டத்தில் எடுத்த அனைத்து முடிவுகள் குறித்தும் விவாதித்தால் இந்த அரசு எவ்வளவு தூரம் மக்கள் விரோத பாசிச அரசு என்பது தெரியவரும் . இதையெல்லாம் மறைக்கத்தான் இந்து,பாகிஸ்தான் மாட்டுமூத்திரம் என்று மடைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மே 17 இயக்கம்
9884072010