குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் மூலம் இந்திய ஒன்றியத்தை இந்து நாடாக மாற்ற துடிக்கும் மத்திய பாசிச பாஜக அரசின் செயலை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது

- in அறிக்கைகள்​, மே 17

தற்போது நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பாசிச பாஜக அரசானது மீண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தன்னுடைய மதவெறியை காட்டியுள்ளது.

குடியுரிமை மசோதாவின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இஸ்லாமியர் அல்லாத மக்களை இந்திய குடிமக்களாக அங்கிகரிப்பதாக இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபொழுது, இஸ்லாமிய மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க இஸ்லாமிய நாடுகள் உள்ளன, ஆனால் இந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க எந்த நாடும் இல்லை என போகிற போக்கில் கூறியுள்ளார். இலங்கை தீவிலே நம் கண் முன்னே கொத்து கொத்தாக ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டு பல லட்சம் ஈழத்தமிழ் மக்கள் ஏதலிகளாக பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர், ஏன் இந்தியாவில் கூட பல ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படை வசதியுமில்லாத முகாம்களில் தங்கி வாழ்ந்து வருகின்றனர் இவர்களை ஏன் இந்திய குடிமக்களாக இந்திய அரசு அங்கிகரிக்கவில்லை. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று இந்திய அரசு சொல்கிறதா?

இந்திய அரசமைப்பு சட்டம் சரத்து 14இல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், சரத்து 15இல் சமயம், இனம் சாதி பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை எனவும் அழுத்தமாக கூறியுள்ளது. இதற்கு நேர் மாறாக இந்திய அரசமைப்பபை கேலிக்கூத்தாக, மாற்றி அதை புறக்கணித்து மதத்தின் அடிப்படையில் இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி, இந்திய ஒன்றியத்தை இந்து நாடாக மாற்ற துடிக்கும் மத்திய ஆளும் பாசிச பாஜக அரசின் செயலை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply