சில மாதங்கள் முன்பு கேரளாவில் நடைபெற்ற Tamil Brahmins Global Meet என்ற கூட்டத்தில் பேசிய வெங்கடகிருஷ்ணன் என்ற பார்ப்பன பேராசிரியர், சாதிமறுப்பு திருமணங்களை எதிர்த்தும், சாதி மறுப்பு திருமணம் செய்வோரை நாய்களுடன் ஒப்பிட்டும், மனிதர்களில் பிறப்பால் அனைவரும் சமமில்லை என்றும், பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள் என்றும் பேசினார்.
சாதி ரீதியாக தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள கோரி, கடந்த ஆகஸ்ட் 2, 2019 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரின் மீதான விசாரணைக்கான அழைப்பின் பேரில் 13-11-2019 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த தோழர்கள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்கள். அதில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் பங்கேற்றார்.
விசாரணையின் அடிப்படையில் வெங்கடகிருஷ்ணன் மீது பிரிவு 153-A, 153A (1)(a), 153A (1)(b), 505(1)(b), 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.